என் கவிதை-1

நீ எனக்குள் கலந்தாய்
உயிராய் உதிரமாய்...


உன்னை அர்சிக்கிறேன்
என்னை மலராய்க்கொண்டு


நான் உன் வழிப்போக்கன்
நீ என் வழி


என் புனித யாத்திரை
உன்னை நோக்கி...


நீயோ இந்த பக்தனிடமே
வரம் கேட்டாய்,


மகிழ்ந்திருந்தேன், அது
மரணமென்று அறியாது.

-நியோப்ரபு
Read more

மைய விலக்கு விசை

விளிம்பு ஓரத்தில் தான்
என்று அச்சுருத்தியது மையம்
நிலவின் விளிம்பு ஆமோதித்துத்
தேய்ந்தது
கடலின் விளிம்பு அலைந்தது தொடர்ந்து
மலையின் விளிம்பு மேகத்தில்
மறைந்தது
வாழ்வின் விளிம்பு நம்மை சாய்த்துவிட்டது
முதுமைப்
பள்ளத்தில்
மையத்திலிருந்து விலகுகிறது
மையம் விலகுகிறது
மையமும் ஒரு நாள்
விளிம்பாகும்
செல்லும் ஓரத்திற்கு
அப்போது சொல்லியது வாழ்க்கை
இது ஆட்ட
விதியென்று
Read more